Monday, October 5, 2009

மக்கள் தொலைக்காட்சி ....

மக்கள் தொலைக்காட்சி விவசாயிகளுக்கு செய்துவரும் தொண்டுபற்றி நான் குறிப்பிடவில்லை என்றால் அது இந்த உழவன் குரலுக்கு சிறுமை.
இது தனியார் தொலைக்கட்சிகளில் தனித்து மட்டுமல்ல ,பொதிகையின் வயலும் வாழ்வை விட நன்றாக இருக்கிறது, மக்களின் மலரும் பூமி.நச் என்று படைப்புகள். எங்குதான் இவர்களுக்கு செய்திகள் கிடைக்குமோ , ஒவ்வொன்றும் புதுசு. விவசாய மக்களுக்கு தேவையானவை இவை அனைத்தும். இதனை சிடி யாக வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

இவர்களின் உழவர் சந்தை இன்னுமொரு அருமையான நிகழ்ச்சி. அதில் இன்னொரு தொகுப்பாளர் திரை மறைவில் இருந்து தொலைபேசி செய்பவர்களின் செய்திகளை தொகுத்து கூறி தொலைபேசி இணைப்பை மற்றம் செய்தால் அதிகம் பேர் பேசலாம். அதில் வரும் ஆசிரியர் ஒவ்வொன்றையும் அழகாக விவரிக்கும் விதம் மிக அருமை.

கொஞ்சம் கத்தரித்து விட்டு தினமும் இரவு மறு ஒளிபரப்பினால் நன்று.

வாழ்க மக்கள் தொலைகாட்சி, வளர்க அதன் புகழ்.
தொடர்க அதன் விவசாய நிகழ்ச்சிகள்.

2 comments:

வனம் said...

வணக்கம்

ஆம் நீங்கள் கூறியது மிகவும் சரியானது.
மலரும் பூமி எனக்கும் மிகவும் உபயோகமாக இருந்த நிகழ்சி.

உழவர் சந்தை இரவில் மீண்டும் ஒளிபரப்பினால் நன்று

இராஜராஜன்

அப்பாவி உழவன் said...

வனம் அவர்களுக்கு வணக்கம்,

விவசாய நிகழ்ச்சிகளை இந்த சின்ன திரையுலகம் கண்டுகொண்டதுபோலவே தெரியவில்லை. எப்படி மக்கள் இத்தனை சீரியல்கள் பார்க்கிறார்கள். அதில் மோசமான ஒரு சீரியல் அளவுக்குகூட விவசாய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் மக்கள் பார்க்க வர மாட்டார்களா என்ன? எனக்கு என்னவோ SUN, RAJ, KALANGAR, VIJAY டிவி கம்பெனிகள்தான் மக்களை தப்பாக எடை போடுகிறார்கள் என நினைக்கிறேன். அல்லது இப்படியும் இருக்கலாம், விவசாய நிகழ்ச்சிகளை பார்க்க விவசாயிகள் வருவார்கள் ஆனால் விளம்பரதாரர்கள் வரமாட்டார்கள் , ஏனெனில் விவசாயிகளிடம் தான் வாங்கும் சக்தி என்பதே இல்லையே. என நினைப்பார்கள் போல.

இதற்கெல்லாம் பதில் சொல்லும் பலம் உழவர் சந்தை,மலரும் பூமி நிகழ்ச்சிகளுக்கு இருக்கிறது.

விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது இன்னமும் அவர்களின் அறியாமையால் உணரவில்லை. கட்சி கொடி பிடித்து ஊரை கெடுக்கின்றனர். கூட்டுறவு கொடி பிடித்தால் நிச்சயம் வெற்றி உறுதி, ஆனால் அது உண்மையான கூட்டுறவாக இருக்க வேண்டும்.

உண்மை வெல்லட்டும். நன்றி.

Post a Comment