Wednesday, September 16, 2009

பசுமை விகடன் மற்றும் தமிழக விவசாயிகள்

நண்பர்களுக்கு வணக்கம்,

நான் பார்க்கிற விவசாய புத்தகத்தையெல்லாம் வாங்கி படிக்கிறவன்.அதில் பெரும்பாலும் விதை கம்பெனிகளின் விளம்பரம் ஒரு பக்கம், பிறகு அந்த விதையால் அதிக விளைச்சல் எடுத்த விவசாயியின் கட்டுரை ஒரு பக்கம் என்று பக்கா கமர்சியல் படம் போல இருக்கும். ஆனால் பசுமை விகடன் ஆரம்பத்தில் ஆனந்த விகடன் இதழில் வந்தபோதே அருமையாக இருந்தது. இப்போது தனி இதழாக விவசாயிகளின் உற்ற தோழனாக மிளிர்கிறது. இதைபோல்ஒரு தமிழ் விவசாய இதழை இதுவரை நான் கண்டதில்லை.இதற்கு அடுத்து எனக்கு பிடித்த புத்தகம் ஸ்பிக் வேளாண் செய்தி மலர். (பெயர் சரி என்றே எண்ணுகிறேன்).

இப்போதுள்ள அடிப்படை விவசாய முறைகள் மாறாமல் விவசாயிகள் விவசாயம் செய்து சமுதாயத்தில் முன்னேற முடியாது என்பது கண்கூடு.

இதுவரை நீங்கள் பசுமை விகடன் வாசிக்கவில்லைஎன்றால் வாழ்வின் ஒரு முக்கிய மற்றும் அடிப்படை தேவையான விவசாயம் பற்றிய ஒரு மாறுபட்ட, ஆச்சரியத்தக்க கண்ணோட்டத்தை நீங்கள் அறிந்துகொள்ளாமலே இருக்கிறீர்கள் என்பது உறுதி.

உழவர்களுக்கு மிகவும் தேவையான கருத்துக்கள் மிக எளிய முறையில் அழகிய படங்களுடன் இதில் விளக்கப்படுகின்றன.

உங்களுக்கு தெரியுமா!

விவசாயம் செய்ய ரசாயன உரம் தேவையில்லை, பூச்சிகொல்லி தேவையில்லை, வீரிய ஒட்டு விதைகள் தேவையில்லை, இன்னும் சொல்லப்போனால் நிலத்தை உழ வேண்டியதில்லை. இயற்கையோடு ஒன்றாக நாம் மாறும்போது அதுவே நம்மை காக்கிறது. என்னை பைத்தியம் என்றுதானே நினைக்கிறீர்கள்? அப்படியானால் நீங்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கத்தான் வேண்டும்.

ஒரு நாட்டு மாட்டையும், 200 லிட்டர் பிளாஸ்டிக் பாத்திரத்தையும், ரோட்டில் கிடைக்கும் சாதரண இலை தலைகளையும் வைத்துக்கொண்டு பாலேக்கரும், நம்மாழ்வாரும், நடராஜனும் கலந்து அடிக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இத்தனை ஆண்டுகளாக(சுமார் 50) நம்மை ஆண்டு வந்த கம்பெனிக்காரங்களுக்கும் விவசாய துறை வல்லுனர்களுக்கும் சாட்டையடி.

பி.கு : எனக்கும் விகடன் இதழுக்கும் எந்தவித மறைமுக, நேர்முக தொடர்பும் இல்லை, ஒரு சந்தாதாரன் என்பதை தவிர.

1 comment:

வானம்பாடி said...

பதிவுக்கு நன்றி நண்பரே நானும் இது போல் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்க நினைத்து இணையத்தை வலம் வந்த போது உங்கள் பதிவை படிக்க நேர்ந்தது தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி... www.tamizasian.blogspot.com வானம்பாடி........

Post a Comment